Advertisement

தமிழ்நாட்டில் தொடரும் காவல் மரணங்கள்: முதல்வர் வாய் திறப்பது எப்போது..? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

“காவல் மரணங்கள் தொடர்கின்றன; முதல்வர் எப்போது வாய்திறப்பார்?” – மு.க.ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில் தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அந்த பதிவில், “தொடரும் காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? எதிர்க்கட்சியாக இருந்தபோது ‘Sorry சொன்னால் போதுமா?’ என்று என்னைப் பார்த்து கேள்வி எழுப்பியவர், இன்று முதலமைச்சராக ஆன பிறகும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “Accountability, Apology ஆகிய வார்த்தைகள் முதலமைச்சருக்குப் பிடிக்காத பட்டியலில் உள்ளதா?” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

காவல் மரணங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறக் கூட மனமில்லாத தவெக அரசுக்கு தனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், இந்த சம்பவங்களுக்கு அரசு பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்

மு.க.ஸ்டாலினின் இந்த பதிவு அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *