Advertisement

சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! தேனாம்பேட்டை, திருவொற்றியூரில் ஒரே நேரத்தில் ரெய்டு

சென்னையில் தேனாம்பேட்டை மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் இன்று (ஜூலை 21) காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தேனாம்பேட்டையில் ஓய்வு பெற்ற ஆர்.டி.ஓ. ஒருவரின் வீட்டிலும், திருவொற்றியூரில் தொழிலதிபர் முருகேசன் என்பவரின் இல்லத்திலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின்போது மத்திய துணை ராணுவப் படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் குவித்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனையின் போது முக்கிய ஆவணங்கள், நிதி பரிவர்த்தனை தொடர்பான ஆதாரங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட வாய்ப்புள்ளதாகவும், விசாரணையின் முடிவில் கூடுதல் தகவல்கள் வெளியாகலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சென்னை அரசியல் மற்றும் தொழில் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *