சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சிக்கு புதிதாக 1,000 பேர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு முதல்வர் விஜய்யையும், தவெக அரசையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அதில் அவர் பேசியதாவது, “திரள்நிதி திருடன்னு சொல்றவன் பிளாக் டிக்கெட்காரன்.. தமிழையே உச்சரிக்காதவனிடம் நாட்டை கொடுத்து நடு ரோட்டில் நிறுத்திட்டியேடா பைத்தியக்காரா.. நடிகனுக்கும், தலைவனுக்கும் வித்தியாசம் தெரியாத தறுதலை கூட்டமே.. சீமான் பென்ஸ் கார் வாங்கிட்டாருன்னு சொல்றாங்க.. திரள்நிதி காசுல ஒரு டீ கூட குடிச்சது இல்லடா.. என் மருமகன் வாங்கி கொடுத்த காருடா அது..தமிழ்நாட்டில் இத்தனை தொகுதிகள் இருக்கும் போது முதல்வர் பெரம்பூரையும், திருச்சி கிழக்கையும் தேடி போய் நின்றது ஏன்..? பெரம்பூரில் மதம், திருச்சி கிழக்கில் சாதியும், மதமும். ஆனால் நீங்கள் சாதியை ஒழிப்பேன் என்கிறீர்கள். உங்களை ஒழிக்காமல் எப்படி இதையெல்லாம் ஒழிப்பது..?
நடிக்கும் போது வராத ஜோசப், அரசியலுக்கு வந்ததும் எப்படி வந்தது..? முதல் படத்தில் அறிமுகமாகும் போது போடாதது ஏன்..? இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என கொலை வெறியில் காத்திருக்கிறேன். இந்த ஆட்சியில் ஒன்லி ரீல்ஸ் (Only Reels )தான் நோ ரூல்ஸ் (No Rules..!) போதைப்பொருள் ஒழிப்புக்காக முதல்வர் 3 கிலே மீட்டர் ஓடினார் என்கிறார்கள். 3 கிலோ மீட்டர் ஓடிய ஒரே முதல்வரா..? 12 கிலோ மீட்டர் நான் ஓடுவேன்.. என்னோடு ஓட முதல்வர் விஜய் தயாரா..?
போதைப்பொருளை ஓடி ஒழிக்க கூடாது.. தேடி ஒழிக்க வேண்டும் முதல்வர் அவர்களே.. சரி ஓடுனீங்களே அந்த போதை பொருள் எல்லாம் ஒழிந்துவிட்டதா..? எதற்காக கோடி கோடியாய் செலவு செய்து தெரு தெருவாக விளம்பரம் செய்கிறீர்கள்..?
கரூர் கூட்ட நெரிசல் விபத்திற்கு காரணம் யார்..? மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்..? நீங்கள் தேவாலயத்தில் முட்டிக்கால் போட்டு வழிபட்டதெல்லாம் உண்மை என்றால் சொல்லுங்க யார் காரணம் என்று..? பாதிக்கப்படவர்களுக்கு அரசு வேலை கொடுத்து அவர்களை விலைக்கு வாங்குவது ஏன்..?” என கோபமாக கேள்வி எழுப்பினார்.
Advertisment













Leave a Reply