Advertisement

அடித்து கொன்னுடுவேன், என்னை பார்த்தா பைத்தியக்காரி போல இருக்கா. அமைச்சர் ஜெகதீஸ்வரி ஷாக் ஆடியோ

தமிழகத்தில் தவெக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளனர். இதனையடுத்து விஜய் தன்னுடன் பல ஆண்டுகள் திரைத்துறை மற்றும் அரசியலில் பயணித்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார்.  அந்த வகையில் ராஜபாளையம் தொகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியாகவும்,பத்திரிகையாளராகப் பணியாற்றினார். ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெகதீஸ்வரிக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராகப் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக விருதுநகரில் நடைபெற்ற அரசு விழாவில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகையில் தனது பெயர் இரண்டாவது இடத்தில் இடம்பெற்றதற்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் மற்றொரு அமைச்சரான கீர்த்தனாவின் பெயருக்கு பின்னால் தனது பெயர் போடப்பட்டதற்கும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில், தவெக நிர்வாகி ஒருவரை கொன்னுடுவேன் என மிரட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ள அந்த ஆடியோவில் நடைபெற்ற பேசியதை தற்போது பார்க்கலாம்.

அமைச்சர்  ஜெகதீஸ்வரி – ஒரு விஷயம் கேட்க கால் செய்தேன். தாசில்தார் அலுவலகம் சென்று அதிகாரிகளை பார்த்தீங்களா.? 

தவெக ஒன்றிய செயலாளர் ராஜ குரு– நான் போகவில்லை. லஷ்மன் தான் சென்றுள்ளார்.

அமைச்சர்  ஜெகதீஸ்வரி – லஷ்மனா.? என்ன சொல்லியிருக்கார்.?

தவெக ஒன்றிய செயலாளர் ராஜ குரு– அதிகாரிகளுக்கு லட்டு கொடுத்துள்ளார்.

அமைச்சர்  ஜெகதீஸ்வரி – ராஜபாளையம் வந்து லட்டு கொடுப்பதற்கும், தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று லட்டு கொடுக்க லஷ்மனுக்கு அதிகாரம் கொடுத்தது யார் .?  சாத்தூரை சேர்ந்தவர் இங்கே எப்படி வருவது.?

தவெக ஒன்றிய செயலாளர் ராஜ குரு– நான் யூனியன் அலுவலத்தில் கான்டிராக்ட் வேலை பார்க்கிறேன். அப்போது அங்கு பிடிஓ என்னிடம் அம்மா (அமைச்சர் ஜெகதீஸ்வரி) எப்போ வருவார்கள் என கேட்டார்கள். கேட்டுட்டு சொல்றேன் என சொன்னேன். 

அமைச்சர்  ஜெகதீஸ்வரி – 3 , 4 ஒன்றியமாக உள்ளது. அனைத்தையும் ஒன்றாக்கி கான்டிராக்ட் எனக்கு கொடுங்கனு பேசியதாக தகவல் வந்தது.

தவெக ஒன்றிய செயலாளர் ராஜ குரு – தங்கள் வீட்டில் வந்து சந்திப்பதாக பிடிஓ கேட்டார்கள். 15ஆம் தேதி வருவாங்கனு சொன்னேன். அப்போது தான் ஒன்றிய செயலாளர் என சொல்லி லஷ்மன் என்பவர் வந்ததாக கூறினாங்க, அதற்கு நான் யாராக இருந்தாலும் அந்த அம்மா தான் எம்எல்ஏ, மாவட்ட செயலாளர், எதுவாக இருந்தாலும் அம்மாட்ட சொல்லிக்கிறோம். அந்த அம்மா பார்த்துக்குவாங்கனு சொல்லியிருக்கேன்.

அமைச்சர்  ஜெகதீஸ்வரி – லஷ்மன் மீது புகார் தெரிவித்து உள்ளே தூக்கி வைத்து விடுவேன். என்னை ஆரம்பத்தில் இருந்து சீண்டிக்கொண்டு இருக்கிறார். ஏற்கனவே பொதுச்செயலாளர் திட்டினார். திரும்ப திரும்ப செய்துகொண்டிருக்காங்க, என்னை பார்த்தா எப்படி தெரியுது. என் தொகுதிக்குள் அந்த பையன் வருவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது. என் தொகுதியில் எப்படி வருவான் அந்த பையன், 

அமைச்சர்  ஜெகதீஸ்வரி  – லஷ்மன் நம்பர் உள்ளதா.?

தவெக ஒன்றிய செயலாளர் ராஜ குரு – நம்பர் தருகிறேன்- நீங்கள் வாட்ஸ் அப் காலில் அவனிடம் பேசுங்கள். 

அமைச்சர்  ஜெகதீஸ்வரி – அவனை தூக்கி வைத்து, ஜட்டியோட வைத்து அடித்து கொன்னுடுவேன், என்னை பார்த்தா பைத்தியக்காரி போல் இருக்கா.?  என அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.

தவெக நிர்வாகி ஒருவரை மிரட்டும் வகையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசிய ஆடியோ தற்போது சமூகவலைதளத்தில் பரவலாகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *