ஒசூர் சிப்காட் அருகே எடுத்ததாக சொல்லப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் வடமாநில லாரி ஓட்டுநர் ஒருவரிடம் அபராதம் வசூலிக்கும் மிஷினுடன் இருக்கும் காவலர் பேசுகிறார்
ஓசூர் அருகே காவல் அதிகாரி ஒருவர் பணம் கேட்ட நிலையில் முதலமைச்சர் விஜயிடம் சொல்லட்டுமா என வடமாநில லாரி ஓட்டுநர் ஒருவர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வரும் நிலையில் நேர்மையான, லஞ்சம் ஊழல் இல்லாத அரசை தர வேண்டும் என செயல்பட்டு வருகிறார். தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு அலுவலகங்களில் பணிகள் லஞ்சம் இல்லாமல் உடனுக்குடன் முடித்துக் கொடுக்கப்படுவதாகவும், தங்களை நாடி வருபவர்களை அதிகாரிகள் மதித்து நடப்பதாகவும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.













Leave a Reply