Advertisement

ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு – பணியாளர்கள் 2 பேர் காயம் – நடந்தது என்ன? எப்படி?

வாரணாசி விமான நிலையத்தில் ஏர் இந்தியா பயணி ஒருவர் கொண்டு சென்ற துப்பாக்கி எதிர்பாராதவிதமாக வெடித்ததில் இருவர் காயமடைந்தனர். அசம்கரைச் சேர்ந்த அந்தப் பயணி, ஏர் இந்தியா விமானத்தில் மும்பைக்குப் பயணிக்கவிருந்தார்.

அவர் தன்னுடன் ஒரு கைத்துப்பாக்கியையும் அதற்கான தோட்டாக்களயும் வைத்திருந்தார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களையும் அறிவித்து இருந்தார். எதிர்பாராத விதமாக அந்த துப்பாக்கி திடீரென வெடிக்க, அதிலிருந்து வந்த தோட்டா தரையில் பட்டு அருகில் நின்றுகொண்டிருந்த இரண்டு பேரின் மீது பாய்ந்துள்ளது.

காலை 9.30 மணியளவில் இந்த சம்பவம் அரங்கேறியதாக வாரணாசி விமானி நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஆசம்கரைச் சேர்ந்த அந்தப் பயணியும் அவரது மனைவியும், ஏர் இந்தியாவின் IX-1810 விமானத்தில் மும்பைக்குப் பயணிக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

அங்கு ​​பாதுகாப்புச் பரிசோதனையின்போது தன்னிடம் துப்பாக்கி இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து AAICLAS (AAI Cargo Logistics and Allied Services Company Limited) நிறுவனத்தின் பரிசோதகர்கள் கைத்துப்பாக்கியை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, ​​அது திடீரென வெடித்ததில் இருவர் காயமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *