Advertisement

மணமகளின் சேலையை இழுத்த மணமகனின் தம்பியால் நடந்த சம்பவம்

உத்திர பிரதேச மாநிலம், ஹர்தோய் மாவட்டத்தில் கடந்த சிலங்களுக்கு முன்பு ஒரு இளம் பெண்ணுக்குத் திருமண நிச்சய ஏற்பாடுகள் நடைபெற்றது. இதையடுத்து, குறிப்பிட்ட தினத்தில் திருமணமும் நடைபெற இருந்தது. அதனால், அன்றைய தினம் இரு வீட்டின் உறவினர்களும் திருமண நிகழ்ச்சியில் கூடினர்

இதையடுத்து, திருமண சடங்குகள் நடைபெற்றன. அந்த சமயத்தில், இருவீட்டின் உறவினர்களும் ஆடல் பாடலுடன் மகிழ்ச்சியாக இருந்தனர்.  இந்த நடனத்தின் போது மாப்பிள்ளையின் தம்பி மணமகளின் சேலை நுனியைப் பிடித்து இழுத்தார்.  

இதனால், மணப்பெண் கடும் ஆத்திரமடைந்தார். இதையடுத்து, அவர் மணமகனின்  தம்பியைக் கடுமையாகத் திட்டினார். பின்பு, இது குறித்து தனது தாய்மாமாவிடம் கூறினார். அவர், இது குறித்து மணமகனின் குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.   

இதனால், இருதரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில், அது கைகலப்பாக மாறியது. இதில், இருவீட்டாரும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் மாப்பிள்ளைக்குத் தலையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஆத்திரமடைந்த மணப்பெண் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. அதனால் இந்த திருமணம் வேண்டாம் என்று திருமணத்தை நிறுத்தி விட்டார். இதையடுத்து, இரு தரப்பினரும் காவல்நிலையத்திற்குச் சென்றனர்.  அங்கு காவல்துறையினர் இரு தரப்பினரையும் அழைத்துப் சமாதானம் பேசினர். மேலும், பாதிக்கப்பட்டவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  

இந்நிலையில், காவல்துறையினரின் சமாதானத்தைத் தொடர்ந்து  நிச்சயிக்கப்பட்டபடி அன்று மாலை திருமணமும் நடைபெற்றது.  இந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *