டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில், கடந்த 23 ஆம் தேதி ருசிக்கா சிங் என்ற பெண், பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாகப் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அப்பெண் மீது ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இது குற்றவியல் வழக்காகப் பதிவு செய்யப்பட்டதையடுத்து நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில், இதற்குக் கண்டனங்களைத் தெரிவித்து சி.ஜே.பி யின் செய்தி தொடர்பாளர் சவுரவ்தாஸ், “போராட்டத்தில் பங்கேற்ற ருசிக்கா சிங் மீது பிரதமர் நரேந்திர மோடியைக் குறித்து அவதூறாகப் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது குற்றவியல் வழக்கில் சேராது. அப்படியானால், மக்களவை உறுப்பினர்களில் 50% பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. பாஜகவில் மட்டும் சுமார் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அத்தகைய வழக்குகள் உள்ளன. வேண்டுமானால் காவல்துறை தங்கள் கவனத்தை அவர்கள் மீது செலுத்தலாமே தவிர, ஒரு பெண் மீது அல்ல. இளைஞர்களைத் துன்புறுத்தும் போக்கு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.












Leave a Reply