Advertisement

கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வில் புதிய வடிகால் அமைப்பு கண்டுபிடிப்பு.

5-ஆம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட வடிகால் அமைப்பை விட இது பெரியதாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 11-ஆம் கட்ட அகழாய்வு செப்டம்பர் மாதம் வரை தொடர உள்ளது

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில், முதல் முறையாக ஒரே குழியில் மூடிய நிலை வடிகால், பீப்பாய் வடிவ குழாய் மற்றும் சுருள் வடிவ குழாய் ஆகியவை இணைந்த வடிகால் அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய அகழாய்வில் இதுவரை 9 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் உறைகிணறு, கைப்பிடியுடன் கூடிய சிவப்பு நிற பானை, சுடுமண் தட்டு, செங்கல் வடிகால், செங்கல் கட்டுமானங்கள் உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் சான்றுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆய்வில், துணிகளுக்கு சாயம் ஏற்றவும் வெளுக்கவும் பயன்படுத்தப்பட்ட தொட்டிகள் மற்றும் இண்டிகோ, நீலம், சிவப்பு நிற சாயங்களின் எச்சங்களும் கண்டறியப்பட்டுள்ளதால், கீழடியில் நெசவு மற்றும் சாயத் தொழில் மேம்பட்ட நிலையில் இருந்தது உறுதியாகியுள்ளது. தற்போது கண்டறியப்பட்ட புதிய வடிகால் அமைப்பு 45 செ.மீ. அகலமும், 2 மீட்டர் நீளமும் கொண்டதாகும். ஏற்கனவே 5-ஆம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட வடிகால் அமைப்பை விட இது பெரியதாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 11-ஆம் கட்ட அகழாய்வு செப்டம்பர் மாதம் வரை தொடர உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *