Advertisement

முதல்வர் விஜய் 14 மணி நேரம் வேலை செய்கிறாரா அமைச்சர் ல்முருக நிர்மல் குமார்

அமைச்சர் நிர்மல் குமார்

முதல்வர் விஜய் தினம் 14 மணி நேரம் மக்களின் சேவைக்காக பணியாற்று கிறார்” என அமைச்சர் நிர் மல் குமார் தெரிவித்தார்.

மதுரை திருநகரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

எம்.ஜி.ஆர்., -ஜெய லலிதா காலத்தில் கூட தி.மு.க., இந்த அளவிற்கு அழிவை சந்தித்ததில்லை. தி.மு.க., கூட்டணி யில் இருந்த கட்சிகளை அழைத்து த.வெ.க., அமைச்சரவையில் இடம் கொடுத்திருப்பது நியா

யம் என்றால் எந்த கூட் டணியும் நியாயம் தான் என அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் கூறியுள்ளார். தினகரன் எதற்காக கட்சி தொடங் கினார். பழனிசாமி துரோகி, பன்னீர்செல்வம் துரோகி என்று கூறித்தான் கட்சியை தொடங்கினார். ஒன்பது ஆண்டு பழனி சாமியை துரோகி எனக் கூறிவிட்டு அவரை முதல் வராக்க ஒரே எம்.எல்.ஏ., வை கவர்னர் மாளிகைக்கு அழைத்துச் சென்றார். தினகரனுடன் பயணித்

தவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.

பழனிசாமியும், ஸ்டா லினும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும் என் பதற்காகவா மக்கள் தீர்ப் பளித்தனர். விஜய் முதல் வராக வேண்டும் என்று தான் மக்கள் தீர்ப்பு அளித் தார்கள். கரூர் உயிரிழப்பு மிகப்பெரிய சதிவேலை. சதி திட்டத்தால் நிகழ்த் தப்பட்டது. இதை யாரும் மறக்க மாட்டோம்.

பலியானவர் குடும் பத்திற்கு உதவியதற்கும், இடைத்தேர்தலுக்கும் சம்

பந்தமில்லை. எப்போது வேண்டுமானாலும் தேர் தலை சந்திக்க தயாராக உள்ளோம். மக்களின் ஆத ரவு எங்களுக்கு உள்ளது.

அனைத்து அமைச் சர்களும் நாள் ஒன்றுக்கு 13 மணி நேரம் வேலை செய்கிறார்கள். முதல்வர் 14 மணி நேரம் வேலை செய்கிறார்.

தி.மு.க., பலவீனம் அடைந்து வருகிறது. தி.மு.க., – அ.தி.மு.க., வை கேலி செய்யும் எண் ணம் எங்களுக்கு இல்லை. அந்த நிலைமைக்கு அவர்கள் தான் காரணம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *